திங்கள், 24 செப்டம்பர், 2012

காலமெல்லாம் காத்திருப்பேன்…



காத்திருந்த காலமெல்லாம்
கானலாகி போக
உன்னை நினைத்திருந்த
ஒவ்வொரு நொடிகளும்
என் விழிகள் கண்ணீர்
எனும் அருவியில் 
வழிந்தோடிய
இரவுகளும் விடியல்களும்
கண் இமைத்த கணமும்
உன் நினைவோடு போக
விழித்திருந்த வேளையிலும்
விழிகள் வலியில் மூடிருந்த வேளையிலும்
உறங்குகிறேன் உறங்குகிறேன்
என உற்றார் நினைத்த வேளைகளிலும்
உன்னை ஒரு நொடியேனும் மறக்காமல்
மனதில் மறைத்து வைத்திருந்த நிலையிலும்
உணர்ந்த வலி உனக்கு புரியவில்லைய?
அல்லது புரிந்தும் 
புரியாதது போன்று நடிக்கும்
உன் குழந்தை தனமான 
பேச்சில் நான் அறியவில்லையா!

ஆயிரம் அணைக்கட்டுக்கள் 
போட்டும் தடுக்கமுடியாத
என் உளக்குமுறல்களை
உன்னிடம் பகிர்ந்து கொள்வதரற்கெனவே
அன்று உனைத்தேடி வந்தேன்
ஆனால் உளக்குமுறல்களை
ஊமையாக்கிக் கொண்டு
உன்னருகில் உயிடர்த்தோழியாக நின்றேன்
என் உண்மைக்காதலை மறைத்து
உன் உயிர்க்காதலை வாழவைப்பதற்க்காக
என்றோ என்னிடத்தில்
நீ உன் காதலை சொன்னபோது
நான் மறுத்த்து
உன்னை நான் நேசிக்கவில்லை என்பதல்ல,
உன் நேசத்தை
நான் அன்று ஏற்றுயிருப்பபேனயின்
நான் என் தேசத்தை இழந்திருப்பேன்.
இன்று எனக்கு இழப்பதற்கு எதும் இல்லை
இருக்கும் உன்னை இழக்க முன்
உன்னிடத்தில் என் நேசத்தை
சொல்ல வந்தேன் இன்று
ஆனால் இன்றோ நீ
இன்னுமொரு இதயத்திற்கு சொந்தமான
என் இனியவன் என்று தெரிந்ததும்
என் இதயத்தோடு சேர்த்து
என் நேசத்தையும் பூட்டி விட்டேன்

என்றேனும் என் கவிதைகளுக்கு
கால்கள் முளைத்தால் வந்து சேரும்.
அன்று என் உண்மை நேசத்தையும்
நீ கண்டு கொள்வாய்
பூட்டிய இதயத்துடன்
என் நேசமும் திறக்கும்
என்றாவது ஓர் நாள்
நான் மறுத்த
உன் நேசத்தையும்
நான் மறைத்த என் நேசத்தையும்
நீ புரிந்து கொள்வாய்
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்திரிப்பினும் ..



0 comments:

கருத்துரையிடுக