என் கவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் கவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜனவரி, 2014

"திருமணம் ஆனால் என்ன
நாம் மனதார விரும்பியவரை அதன் பிறகு வெறுத்துவிட வேண்டுமா என்ன?
அவரை சபித்துவிட வேண்டுமா என்ன?
ஒருவரை உண்மையாகவே நேசித்திருந்தால் அவ்வாறு அவருக்கு ஒருபோதும் கெடுதல் நினைக்க முடியாது. அவர் எங்கே, யாருடன் வாழ்ந்தாலும் மிகச் சிறப்பாக வாழ வேண்டுமென பிரார்த்திக் கொண்டேயிருக்கும் மனம்..."




வியாழன், 2 ஜனவரி, 2014

எனக்கும் உண்டு இதயம்

காற்று இல்லாத பிரபஞ்சம்
மீண்டும் புதுப்பித்து செல்கிறது
இன்னும் நான் மறந்து போகாத
உந்தன் அழகிய நினைவுகளை

காலப் பெருவெளியில்
இழுத்துக்கட்டவும்
தடுத்து நிறுத்தவும் முடியாமல்
தினம் கரைந்து போகிறது
உனக்கான காத்திருபின் தருணங்கள்

உனக்கான  
காத்திருப்பின் இடைவெளிகளில்
கரைந்து போகும் தனிமையைக்கூட
சில நேரங்களில் சுகமாகத்தான்
உணர்கிறது இந்த உள்ளம்...


காயங்கள்


புதன், 21 நவம்பர், 2012

கனவுகளின் காதலன்





இதயத்தில் இடம்
பிடிக்க தவறி விட்டாலும்
என் விழிகளில் இருந்து    
உன் உணர்வுகள் இன்னும்
உணர்கிறேன்.

இதழோடு பேசிய மொழிகளை
விடவும்
மௌனத்தினால் நான் 
உனக்கு
தந்த வலிகளே அதிகம்
இன்றும் என் கனவுகளின்
காதலனாக உன்
அகமறியேன்
நீ காத்திருந்த
புறமறியேன்.

திங்கள், 19 நவம்பர், 2012

இருந்துமின்றி..

இல்லமலே இருப்பது இன்பம்!
இருந்தும் இன்றி வாழ்வது துன்பம்!
 

வியாழன், 15 நவம்பர், 2012

எப்படி முடியும் நீயாக மாற???

சூரையில் மாட்டிக்கொண்டு                                                            
சுழல்கின்றேன்
சேறுமிடம் குப்பையோ கோபுரமோ
அறியேன்

திசையோ தேர்வோ
என் வசமில்லை
தித்திப்போ கைப்போ
ருசி பேதமில்லை

காறறின் போக்கில்
காலங்கடத்துகிறேன்
நிற்கவோ நிலைக்கவோ
நேரமில்லை

அழியாத ஆயிரம்
 நினைவிருக்கலாம்
உன் பக்க
நியாயமுமிருக்கலாம்

நிபந்தனைகளிடாதே
நிர்பந்திக்கதே
நீயாக மாறசசொல்லி
என்னை

நானகவே இருக்க முடியத
என்னால்
எப்படி முடியும்
நீயாக மாற???

புதன், 14 நவம்பர், 2012

உன் தோழி..


திங்கள், 12 நவம்பர், 2012

நன்றி


ஞாயிறு, 11 நவம்பர், 2012

நீயே


புதன், 3 அக்டோபர், 2012

அழகே அழகாய்...


வசந்தம் ஒரு ஒரு நாள் வசப்படும்

எதிர் பார்கிறேன்.. எதிர் பார்கிறேன்..
வசந்தகாலத்தை மட்டுமல்ல
உன் வருகையையுமே!.....

வியாழன், 27 செப்டம்பர், 2012

தினமொரு புதுப்பாடல் இசைக்கிறேன் உனக்காக

சேர்ந்திடத்தான் துடிக்கின்றேன்
எங்கோ ஒரு மூலையில்
தடுக்கின்றது என் தன்மானம்
பலமுறை நான் உன்னை
அலட்சியப்படுத்தியது போன்று
ஒருமுறையேனும் நீ எனக்கு செய்திருந்தால்
அந்த வலி என்னவென்று
நானும் அறிந்துருப்பேனடா!
தினமொரு புதுக்கவிதை படைக்கிறேன்
என்றேனும் ஓர் நாள் இக்கவிதைகள்
உன்னை வந்தடையும் என!

புதன், 26 செப்டம்பர், 2012

இது தான் நேசமா?

தினமொரு கருத்து வேற்றுமை நமக்குள்
தினமொரு மனத்தாபங்கள் எம் இருவருக்குள்
ஆனால் நொடிக்கொருமுறை
நம் உதட்டில் புன்னகை எனும்
இன்பத்தூரல் தூவாத நொடிப்பொழுதுகள் இல்லை
இதுவும் நேசமா? இது தான் நேசமா??

புதுக்கவிதை


வாழ்வில் நான் 
கண்ட துயர் என்னை
விட்டொழிந்தது.
புதுக்கவிதை 
படைக்கும் காலம்
நெருங்கி விட்டது.
துணை நின்ற 
கரங்கள்
தொலைதூரம்
 போயினும்
துயர் கொண்ட
 கதையை
 என் பேனா மைகள் 
இனியும் வடிக்காது.


திங்கள், 24 செப்டம்பர், 2012

காலமெல்லாம் காத்திருப்பேன்…



காத்திருந்த காலமெல்லாம்
கானலாகி போக
உன்னை நினைத்திருந்த
ஒவ்வொரு நொடிகளும்
என் விழிகள் கண்ணீர்
எனும் அருவியில் 
வழிந்தோடிய
இரவுகளும் விடியல்களும்
கண் இமைத்த கணமும்
உன் நினைவோடு போக
விழித்திருந்த வேளையிலும்
விழிகள் வலியில் மூடிருந்த வேளையிலும்
உறங்குகிறேன் உறங்குகிறேன்
என உற்றார் நினைத்த வேளைகளிலும்
உன்னை ஒரு நொடியேனும் மறக்காமல்
மனதில் மறைத்து வைத்திருந்த நிலையிலும்
உணர்ந்த வலி உனக்கு புரியவில்லைய?
அல்லது புரிந்தும் 
புரியாதது போன்று நடிக்கும்
உன் குழந்தை தனமான 
பேச்சில் நான் அறியவில்லையா!

ஆயிரம் அணைக்கட்டுக்கள் 
போட்டும் தடுக்கமுடியாத
என் உளக்குமுறல்களை
உன்னிடம் பகிர்ந்து கொள்வதரற்கெனவே
அன்று உனைத்தேடி வந்தேன்
ஆனால் உளக்குமுறல்களை
ஊமையாக்கிக் கொண்டு
உன்னருகில் உயிடர்த்தோழியாக நின்றேன்
என் உண்மைக்காதலை மறைத்து
உன் உயிர்க்காதலை வாழவைப்பதற்க்காக
என்றோ என்னிடத்தில்
நீ உன் காதலை சொன்னபோது
நான் மறுத்த்து
உன்னை நான் நேசிக்கவில்லை என்பதல்ல,
உன் நேசத்தை
நான் அன்று ஏற்றுயிருப்பபேனயின்
நான் என் தேசத்தை இழந்திருப்பேன்.
இன்று எனக்கு இழப்பதற்கு எதும் இல்லை
இருக்கும் உன்னை இழக்க முன்
உன்னிடத்தில் என் நேசத்தை
சொல்ல வந்தேன் இன்று
ஆனால் இன்றோ நீ
இன்னுமொரு இதயத்திற்கு சொந்தமான
என் இனியவன் என்று தெரிந்ததும்
என் இதயத்தோடு சேர்த்து
என் நேசத்தையும் பூட்டி விட்டேன்

என்றேனும் என் கவிதைகளுக்கு
கால்கள் முளைத்தால் வந்து சேரும்.
அன்று என் உண்மை நேசத்தையும்
நீ கண்டு கொள்வாய்
பூட்டிய இதயத்துடன்
என் நேசமும் திறக்கும்
என்றாவது ஓர் நாள்
நான் மறுத்த
உன் நேசத்தையும்
நான் மறைத்த என் நேசத்தையும்
நீ புரிந்து கொள்வாய்
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்திரிப்பினும் ..