வியாழன், 2 ஜனவரி, 2014

எனக்கும் உண்டு இதயம்

காற்று இல்லாத பிரபஞ்சம்
மீண்டும் புதுப்பித்து செல்கிறது
இன்னும் நான் மறந்து போகாத
உந்தன் அழகிய நினைவுகளை

காலப் பெருவெளியில்
இழுத்துக்கட்டவும்
தடுத்து நிறுத்தவும் முடியாமல்
தினம் கரைந்து போகிறது
உனக்கான காத்திருபின் தருணங்கள்

உனக்கான  
காத்திருப்பின் இடைவெளிகளில்
கரைந்து போகும் தனிமையைக்கூட
சில நேரங்களில் சுகமாகத்தான்
உணர்கிறது இந்த உள்ளம்...


0 comments:

கருத்துரையிடுக