புதன், 21 நவம்பர், 2012

கனவுகளின் காதலன்





இதயத்தில் இடம்
பிடிக்க தவறி விட்டாலும்
என் விழிகளில் இருந்து    
உன் உணர்வுகள் இன்னும்
உணர்கிறேன்.

இதழோடு பேசிய மொழிகளை
விடவும்
மௌனத்தினால் நான் 
உனக்கு
தந்த வலிகளே அதிகம்
இன்றும் என் கனவுகளின்
காதலனாக உன்
அகமறியேன்
நீ காத்திருந்த
புறமறியேன்.

திங்கள், 19 நவம்பர், 2012

இருந்துமின்றி..

இல்லமலே இருப்பது இன்பம்!
இருந்தும் இன்றி வாழ்வது துன்பம்!
 

வியாழன், 15 நவம்பர், 2012

நீயே கடிதமாய்

எப்போதும்
நலவிசாரணையோடு
தொடங்குகிறது உனது உனது கடிதங்கள்
செயற்கையாய்
உன் வீடு, உறவினர்
சீதோஷண நிலை என
இடம் நிரப்பிக்கொள்கின்றன
சூழல்கள்

உனது சந்தோசம்,சிலிர்ப்பு
ஏக்கம், கனவு, காதல் என
எனக்கான உனது
நிகழ்கால விரிப்புகள்
எனது கையில்
இறந்தகாலப் பதிவுகளாய்

காலம் கடந்து நிற்கும்
பரிவர்த்தனைகள் எதுவும்
நமக்குள் நிகழ்ந்ததாய்
நினைக்கவில்லை எனக்கு

உனது முகமாய்,
சில சமயம் நீயாய்
இருக்கும்
எனக்கான உனது கடிதங்கள்
இனிமேலேனும்
இயல்பாய் இருக்கட்டும்
கசங்கிய காகிததில்
அழகாய் தெரியும் உன்னைப்போல்
அழகாய்த் தோன்றும்
தூங்கும் குழட்ந்தைப்போல்..!!

எப்படி முடியும் நீயாக மாற???

சூரையில் மாட்டிக்கொண்டு                                                            
சுழல்கின்றேன்
சேறுமிடம் குப்பையோ கோபுரமோ
அறியேன்

திசையோ தேர்வோ
என் வசமில்லை
தித்திப்போ கைப்போ
ருசி பேதமில்லை

காறறின் போக்கில்
காலங்கடத்துகிறேன்
நிற்கவோ நிலைக்கவோ
நேரமில்லை

அழியாத ஆயிரம்
 நினைவிருக்கலாம்
உன் பக்க
நியாயமுமிருக்கலாம்

நிபந்தனைகளிடாதே
நிர்பந்திக்கதே
நீயாக மாறசசொல்லி
என்னை

நானகவே இருக்க முடியத
என்னால்
எப்படி முடியும்
நீயாக மாற???

புதன், 14 நவம்பர், 2012

உன் தோழி..


திங்கள், 12 நவம்பர், 2012

நன்றி


ஞாயிறு, 11 நவம்பர், 2012

நீயே


செவ்வாய், 23 அக்டோபர், 2012

Rose


புதன், 3 அக்டோபர், 2012

அழகே அழகாய்...


வசந்தம் ஒரு ஒரு நாள் வசப்படும்

எதிர் பார்கிறேன்.. எதிர் பார்கிறேன்..
வசந்தகாலத்தை மட்டுமல்ல
உன் வருகையையுமே!.....

திங்கள், 1 அக்டோபர், 2012

திருப்பமா தடங்களா?


திரும்பும் ஒவ்வொரு
திசையிலும் திருப்பங்கள்.
வாழ்வினில் பூமாலை சுமப்பதா
புகழ்மாலை சுமப்பதா
எனும் கேள்விக்குறி
புகழ் மாலை எனும் முற்றுப்புள்ளியோடு முடிந்தது.
தொடரும் என் எதிர் காலம்
ஆனல் இனியும் தொடரப்போவதில்லை
நம் உறவு
என்கின்ற உன் கனிவான கனமான சொல்
எங்கோ ஒரு மூலையில்
என் இருதயதில்
முல்லைப்போல் குத்துகின்றது…..

வியாழன், 27 செப்டம்பர், 2012

தினமொரு புதுப்பாடல் இசைக்கிறேன் உனக்காக

சேர்ந்திடத்தான் துடிக்கின்றேன்
எங்கோ ஒரு மூலையில்
தடுக்கின்றது என் தன்மானம்
பலமுறை நான் உன்னை
அலட்சியப்படுத்தியது போன்று
ஒருமுறையேனும் நீ எனக்கு செய்திருந்தால்
அந்த வலி என்னவென்று
நானும் அறிந்துருப்பேனடா!
தினமொரு புதுக்கவிதை படைக்கிறேன்
என்றேனும் ஓர் நாள் இக்கவிதைகள்
உன்னை வந்தடையும் என!

புதன், 26 செப்டம்பர், 2012

இது தான் நேசமா?

தினமொரு கருத்து வேற்றுமை நமக்குள்
தினமொரு மனத்தாபங்கள் எம் இருவருக்குள்
ஆனால் நொடிக்கொருமுறை
நம் உதட்டில் புன்னகை எனும்
இன்பத்தூரல் தூவாத நொடிப்பொழுதுகள் இல்லை
இதுவும் நேசமா? இது தான் நேசமா??