செவ்வாய், 17 ஜூலை, 2012

உனக்கு தெரியுமா??

சிறைகளை தாண்டியும்
எனக்கொரு சிறகு இருக்கிறதென்று,
சொற்களை தாண்டியும்
சொல்லாத மொழியொன்று இருக்கிறதென்று
காத்திருக்கையில் கால்களை விட
காதலுக்கு வலி அதிகமென்று,
என்றைக்கனும் உன் முகவரியில்லாமல்
எனக்குவரும் வாழ்த்து மடலில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேனென்று
உனக்கு தெரியுமா?


வியாழன், 12 ஜூலை, 2012

உன் நினைவே போதும்...



விழிகள்
விழித்திருந்த
வேளைகளை விடவும்

உன் நினைவில்
நனைந்திருந்த
நொடிகளே அதிகம்!

புதன், 11 ஜூலை, 2012

இவளும்....

தடைதாண்டி                                  
தனியக நடந்தவள்,

துணையின்றி
துயர்தனை எதிர் கொண்டவள்,

தயவின்றி 
தரைதனை கடந்தவள்,

இன்று தலை தாழ்ந்து
சிரம் பணிகிறாள்!!

வலி..

விடிந்த காலை பொழுதுகள் கானலாகிய போதே உணர்ந்தேன்!
விரிந்த விட்டில் பூச்சிகள் விழுந்து மடிகையில் உணர்ந்தேன்!
விதி வரைந்த வரையரையில் வாழும் வலியை!!


மலரும் மொட்டுகள்


      வாழ்வோடும் சாவோடும் போராடும் இம்மலரும் மொட்டுக்கல்
எதை எண்னி இத்துணை போராட்டங்களை மேற்கொள்கின்ரறனர்?    எல்லாம் விடுதலைக்காகவே! விடுதலை என்றால் ஓர் நாட்டிற்காவோ, ஊரிற்காகவோ, அல்லது அடிமை தனத்திற்காகவோ அல்ல. பசிப்பிணிக்காக போரடும் பஞ்ச போராட்டமே இது!!

                      

இடுக்காட்டில் ஏழைக்குழந்தையொன்று
நடுக்காட்டில் கொலைப்பசியுடன்
ஏறவும் முடியமல், இறங்கவும் முடியமல்
துடிக்கின்றது.

இதை அறிவார் யாரும் இல்லை.
தெரிவார் எவரும் இல்லை.

எதை எண்ணி இவர்கள் அழுகின்றனர்?
எதை எண்ணி இவர்கள் அலறுகின்றனர்??
என்று விடியும் இவர்களின் வாழ்வு?


மறுப்பது ஏன்?


விடியலை எதிர் பார்கும் ஒவ்வொரு பூக்களுக்கும்,
புல் நுனியில் படரும் ஒவ்வொரு பனித்துளிக்கும்,
கடல்தனில் கரைசேரும் ஒவ்வொரு நுரைக்கும்,
மண்தனில் விழும் ஒவ்வொரு மழைத்துளிக்கும்,
வாழ்வு ஓர் நாளே!
அவை பூக்க மறுப்பதும் இல்லை.
படர மறுப்பதும் இல்லை.
சேர மறுப்பதும் இல்லை.
விழ மறுப்பதும் இல்லை.
மானிடராய் பிறந்த நாம் மட்டும் ஏன் மறுக்கின்றோம், மறக்கின்றோம்??




இவள்



சிகப்பு ரோஜாக்களின் மத்தீயில்,
சிலிர்கும் முட்களின் மத்தீயில்,
சிலிர் விடும் இலைகளின் மத்தீயில், மொட்டக உருவனவள்.
இன்று மலரும் முன்பே மலர் வலயமனவள் இவள்!!.