Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 நவம்பர், 2012

இருந்துமின்றி..

இல்லமலே இருப்பது இன்பம்!
இருந்தும் இன்றி வாழ்வது துன்பம்!
 

வியாழன், 15 நவம்பர், 2012

நீயே கடிதமாய்

எப்போதும்
நலவிசாரணையோடு
தொடங்குகிறது உனது உனது கடிதங்கள்
செயற்கையாய்
உன் வீடு, உறவினர்
சீதோஷண நிலை என
இடம் நிரப்பிக்கொள்கின்றன
சூழல்கள்

உனது சந்தோசம்,சிலிர்ப்பு
ஏக்கம், கனவு, காதல் என
எனக்கான உனது
நிகழ்கால விரிப்புகள்
எனது கையில்
இறந்தகாலப் பதிவுகளாய்

காலம் கடந்து நிற்கும்
பரிவர்த்தனைகள் எதுவும்
நமக்குள் நிகழ்ந்ததாய்
நினைக்கவில்லை எனக்கு

உனது முகமாய்,
சில சமயம் நீயாய்
இருக்கும்
எனக்கான உனது கடிதங்கள்
இனிமேலேனும்
இயல்பாய் இருக்கட்டும்
கசங்கிய காகிததில்
அழகாய் தெரியும் உன்னைப்போல்
அழகாய்த் தோன்றும்
தூங்கும் குழட்ந்தைப்போல்..!!

எப்படி முடியும் நீயாக மாற???

சூரையில் மாட்டிக்கொண்டு                                                            
சுழல்கின்றேன்
சேறுமிடம் குப்பையோ கோபுரமோ
அறியேன்

திசையோ தேர்வோ
என் வசமில்லை
தித்திப்போ கைப்போ
ருசி பேதமில்லை

காறறின் போக்கில்
காலங்கடத்துகிறேன்
நிற்கவோ நிலைக்கவோ
நேரமில்லை

அழியாத ஆயிரம்
 நினைவிருக்கலாம்
உன் பக்க
நியாயமுமிருக்கலாம்

நிபந்தனைகளிடாதே
நிர்பந்திக்கதே
நீயாக மாறசசொல்லி
என்னை

நானகவே இருக்க முடியத
என்னால்
எப்படி முடியும்
நீயாக மாற???

செவ்வாய், 23 அக்டோபர், 2012

Rose