வியாழன், 20 செப்டம்பர், 2012

நான் யார்?



 சொல்லும் அளவிற்கு அன்னை தெரசாவும் அல்ல
 சொல்லாமல் செல்லும் அளவிற்கு சிறப்பற்ரவளும் அல்ல
 இதயம் திறந்த இன்னிசை
 சிறகு முளைத்த சிறு பறவை
 கண் திறந்த கார் மேகம்
 என்றாலும் தவறு இல்லை.. 

 வாழ்க்கை எனும் ஆழ்க்கடலில் துடுப்புக்களற்ற சிறு படகாக தத்தளிக்கும் என் வாழ்வு விடியலை நோக்கி விதி விட்ட வழியில் மதிகெட்ட மானிடரின் மத்தியில் மனதினை மறைத்து வாழும் முழுமதி..





என் வாழ்க்கை திறந்த ஏடு



காலங்களில் சிறந்த காலம் உன்னுடன் வாழ்ந்த பொற்காலம்.
காயங்களில் அதிகம் வலித்த காயம் நீ தந்த பிரிவு எனும் காயம்.
காலங்கள் காற்றினில் கரைக்கப்பட்டன.
காயங்கள் கானலாக்கப்பட்டன.
காலங்களும் காயங்களும் மறக்கப்பட்டது
அவை நீ வந்து போன தடங்களை அழிக்க முடிந்ததே தவிர
உன் நினைவை அல்ல.

இன்னும் உன் நினைவோடு நான் வாழுகின்றேன்
என்பதற்கு ஒரே ஒரு சாட்சி உன் வரவையும் பிரிவையும் நினைவையும்
என் பேனைமுனைகளின் மையினால்
என் கவிகள் உயிரோட்டமாகின்றதே!

நின்று நிமிர்ந்து நிற்க்கையில்
தடம் புரளச்செய்த உன் வரவு தலைநிமிரச்செய்தது
ஆனால் அதே பிரிவு
மீண்டும் என்னை தலை குனியச்செய்த போதே உணர்ந்தேன்
நான் தலை சாய்ந்து ஆறுதல் பெறுவதற்கு
உன்னைப்போல் எவரும் என் அருகில் இல்லை என..



புதன், 19 செப்டம்பர், 2012

நினைவடன்..

உன் நினைவுடன்

 


அன்று விழிகளில் விழுந்த உன்னை வெறுக்கவும் முடியமல் விலகவும் முடியமல் தவித்த வேளையில் என் விழிகளில் விழுந்த கண்ணீரை துடைப்பதற்கு தகுதியயை உனக்கு தரவில்லை.
இன்று விழிகளை விட்டு விலகி வெறுமையான் வாழ்க்கை வாழும் போது எண்ணத்தோன்றுகிறது அன்று உனக்கு என் கண்ணீரைத் துடைக்கும் தகுதியயை தந்திருப்பேனாயின் காலம் முழுவதும் என் கண்ணீரை துடைத்திருப்பாய் இன்னும் காலம் முழுவதும் என் கண்ணீருக்கு காரணமாகவும் நீயே அமைந்திருப்பாய்!

எப்போதும் புரியாத புதிராய் முளைத்த உன் அன்பு அன் வாழ்க்கையில் நான் அனுபவித்த சோகங்களை மேலும் சுமைகளாக்கின. காயங்களை ரணங்களாக்கின.. ஆனால் உன் இனம் புரியத அன்பு மாத்திரம் அனலாக அணைக்க தவறியதில்லை என்பதையும் நான் மறுப்பதற்கு இல்லை..

அனலாக அணைத்த அன்பை அணைத்து விட்டு ஆதரவான கரங்களை தேடிச்செனற்து உனக்கு துரோகமாக தெரிந்தாலும், ஆனல் நான் துரோகி அல்ல இங்கிருந்த போதும் எங்கிருந்த போதும் உன் நினைவுடனே வாழுகின்றேன், அது உனது அன்பை திரும்ப பெறுவதற்காக அல்ல உன் நினைவுடன் வாழும் வாழ்க்கையே என்றும் போதும்!



செவ்வாய், 18 செப்டம்பர், 2012

விடிவை நோக்கி..



ஆயிரம் வலிகளையும் துன்பங்களையும் எதிர் கொண்டு ஒவ்வொரு நொடியும் சிரகிலந்த பறவையாக வாழும் என் வாழ்க்கையின் இன்னுமொரு சுவையான பாகம் துவங்குகின்ன்றது. என் மானசிக குரு மற்றும் இதயத்தை நட்பு எனும் நறுமணத்தால் நிரப்பிய அவர்களின் வழிகாட்டலின் மூலம் துவங்கும் முதல் பயணம்…


செவ்வாய், 17 ஜூலை, 2012

உனக்கு தெரியுமா??

சிறைகளை தாண்டியும்
எனக்கொரு சிறகு இருக்கிறதென்று,
சொற்களை தாண்டியும்
சொல்லாத மொழியொன்று இருக்கிறதென்று
காத்திருக்கையில் கால்களை விட
காதலுக்கு வலி அதிகமென்று,
என்றைக்கனும் உன் முகவரியில்லாமல்
எனக்குவரும் வாழ்த்து மடலில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேனென்று
உனக்கு தெரியுமா?


வியாழன், 12 ஜூலை, 2012

உன் நினைவே போதும்...



விழிகள்
விழித்திருந்த
வேளைகளை விடவும்

உன் நினைவில்
நனைந்திருந்த
நொடிகளே அதிகம்!

புதன், 11 ஜூலை, 2012

இவளும்....

தடைதாண்டி                                  
தனியக நடந்தவள்,

துணையின்றி
துயர்தனை எதிர் கொண்டவள்,

தயவின்றி 
தரைதனை கடந்தவள்,

இன்று தலை தாழ்ந்து
சிரம் பணிகிறாள்!!