திங்கள், 24 செப்டம்பர், 2012

காலமெல்லாம் காத்திருப்பேன்…



காத்திருந்த காலமெல்லாம்
கானலாகி போக
உன்னை நினைத்திருந்த
ஒவ்வொரு நொடிகளும்
என் விழிகள் கண்ணீர்
எனும் அருவியில் 
வழிந்தோடிய
இரவுகளும் விடியல்களும்
கண் இமைத்த கணமும்
உன் நினைவோடு போக
விழித்திருந்த வேளையிலும்
விழிகள் வலியில் மூடிருந்த வேளையிலும்
உறங்குகிறேன் உறங்குகிறேன்
என உற்றார் நினைத்த வேளைகளிலும்
உன்னை ஒரு நொடியேனும் மறக்காமல்
மனதில் மறைத்து வைத்திருந்த நிலையிலும்
உணர்ந்த வலி உனக்கு புரியவில்லைய?
அல்லது புரிந்தும் 
புரியாதது போன்று நடிக்கும்
உன் குழந்தை தனமான 
பேச்சில் நான் அறியவில்லையா!

ஆயிரம் அணைக்கட்டுக்கள் 
போட்டும் தடுக்கமுடியாத
என் உளக்குமுறல்களை
உன்னிடம் பகிர்ந்து கொள்வதரற்கெனவே
அன்று உனைத்தேடி வந்தேன்
ஆனால் உளக்குமுறல்களை
ஊமையாக்கிக் கொண்டு
உன்னருகில் உயிடர்த்தோழியாக நின்றேன்
என் உண்மைக்காதலை மறைத்து
உன் உயிர்க்காதலை வாழவைப்பதற்க்காக
என்றோ என்னிடத்தில்
நீ உன் காதலை சொன்னபோது
நான் மறுத்த்து
உன்னை நான் நேசிக்கவில்லை என்பதல்ல,
உன் நேசத்தை
நான் அன்று ஏற்றுயிருப்பபேனயின்
நான் என் தேசத்தை இழந்திருப்பேன்.
இன்று எனக்கு இழப்பதற்கு எதும் இல்லை
இருக்கும் உன்னை இழக்க முன்
உன்னிடத்தில் என் நேசத்தை
சொல்ல வந்தேன் இன்று
ஆனால் இன்றோ நீ
இன்னுமொரு இதயத்திற்கு சொந்தமான
என் இனியவன் என்று தெரிந்ததும்
என் இதயத்தோடு சேர்த்து
என் நேசத்தையும் பூட்டி விட்டேன்

என்றேனும் என் கவிதைகளுக்கு
கால்கள் முளைத்தால் வந்து சேரும்.
அன்று என் உண்மை நேசத்தையும்
நீ கண்டு கொள்வாய்
பூட்டிய இதயத்துடன்
என் நேசமும் திறக்கும்
என்றாவது ஓர் நாள்
நான் மறுத்த
உன் நேசத்தையும்
நான் மறைத்த என் நேசத்தையும்
நீ புரிந்து கொள்வாய்
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்திரிப்பினும் ..



உறங்க விடு


பூக்களின் மத்தியில் என் கரங்களில் கிடைத்த
     ஒளிச்சுடரே!

பூமி தன்னை கடல் தொடுகையில் இணைந்த  
    உறவே!

தொடு வானில் சுடு திங்கள் மறைந்துமுழுதியிற்கு வழிவிடும்நொடி என்னுள் எழுந்த
    கனவே!


உன் இன்னிசையில் உலகை உறங்கச்செய்யும் நீ
என்னை மட்டும் உன் வசையால் 
உறங்க விடமல் செய்வது ஏன்?


வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நான் கண்ட நேரம்.



பூ தளிர் விட்ட நேரம்..
சிப்பியில் முத்துக்குளித்த நேரம்..
விண்மீன்கள் விருட்ச்சித்த நேரம்..
வானில் வான்மதி தோன்றிய நேரம்..
என் வாழ்க்கையில் வரம் பெற்ற நேரம்
உன்னை கண்ட அந்த நேரம்!!

வியாழன், 20 செப்டம்பர், 2012

நான் யார்?



 சொல்லும் அளவிற்கு அன்னை தெரசாவும் அல்ல
 சொல்லாமல் செல்லும் அளவிற்கு சிறப்பற்ரவளும் அல்ல
 இதயம் திறந்த இன்னிசை
 சிறகு முளைத்த சிறு பறவை
 கண் திறந்த கார் மேகம்
 என்றாலும் தவறு இல்லை.. 

 வாழ்க்கை எனும் ஆழ்க்கடலில் துடுப்புக்களற்ற சிறு படகாக தத்தளிக்கும் என் வாழ்வு விடியலை நோக்கி விதி விட்ட வழியில் மதிகெட்ட மானிடரின் மத்தியில் மனதினை மறைத்து வாழும் முழுமதி..





என் வாழ்க்கை திறந்த ஏடு



காலங்களில் சிறந்த காலம் உன்னுடன் வாழ்ந்த பொற்காலம்.
காயங்களில் அதிகம் வலித்த காயம் நீ தந்த பிரிவு எனும் காயம்.
காலங்கள் காற்றினில் கரைக்கப்பட்டன.
காயங்கள் கானலாக்கப்பட்டன.
காலங்களும் காயங்களும் மறக்கப்பட்டது
அவை நீ வந்து போன தடங்களை அழிக்க முடிந்ததே தவிர
உன் நினைவை அல்ல.

இன்னும் உன் நினைவோடு நான் வாழுகின்றேன்
என்பதற்கு ஒரே ஒரு சாட்சி உன் வரவையும் பிரிவையும் நினைவையும்
என் பேனைமுனைகளின் மையினால்
என் கவிகள் உயிரோட்டமாகின்றதே!

நின்று நிமிர்ந்து நிற்க்கையில்
தடம் புரளச்செய்த உன் வரவு தலைநிமிரச்செய்தது
ஆனால் அதே பிரிவு
மீண்டும் என்னை தலை குனியச்செய்த போதே உணர்ந்தேன்
நான் தலை சாய்ந்து ஆறுதல் பெறுவதற்கு
உன்னைப்போல் எவரும் என் அருகில் இல்லை என..



புதன், 19 செப்டம்பர், 2012

நினைவடன்..

உன் நினைவுடன்

 


அன்று விழிகளில் விழுந்த உன்னை வெறுக்கவும் முடியமல் விலகவும் முடியமல் தவித்த வேளையில் என் விழிகளில் விழுந்த கண்ணீரை துடைப்பதற்கு தகுதியயை உனக்கு தரவில்லை.
இன்று விழிகளை விட்டு விலகி வெறுமையான் வாழ்க்கை வாழும் போது எண்ணத்தோன்றுகிறது அன்று உனக்கு என் கண்ணீரைத் துடைக்கும் தகுதியயை தந்திருப்பேனாயின் காலம் முழுவதும் என் கண்ணீரை துடைத்திருப்பாய் இன்னும் காலம் முழுவதும் என் கண்ணீருக்கு காரணமாகவும் நீயே அமைந்திருப்பாய்!

எப்போதும் புரியாத புதிராய் முளைத்த உன் அன்பு அன் வாழ்க்கையில் நான் அனுபவித்த சோகங்களை மேலும் சுமைகளாக்கின. காயங்களை ரணங்களாக்கின.. ஆனால் உன் இனம் புரியத அன்பு மாத்திரம் அனலாக அணைக்க தவறியதில்லை என்பதையும் நான் மறுப்பதற்கு இல்லை..

அனலாக அணைத்த அன்பை அணைத்து விட்டு ஆதரவான கரங்களை தேடிச்செனற்து உனக்கு துரோகமாக தெரிந்தாலும், ஆனல் நான் துரோகி அல்ல இங்கிருந்த போதும் எங்கிருந்த போதும் உன் நினைவுடனே வாழுகின்றேன், அது உனது அன்பை திரும்ப பெறுவதற்காக அல்ல உன் நினைவுடன் வாழும் வாழ்க்கையே என்றும் போதும்!



செவ்வாய், 18 செப்டம்பர், 2012

விடிவை நோக்கி..



ஆயிரம் வலிகளையும் துன்பங்களையும் எதிர் கொண்டு ஒவ்வொரு நொடியும் சிரகிலந்த பறவையாக வாழும் என் வாழ்க்கையின் இன்னுமொரு சுவையான பாகம் துவங்குகின்ன்றது. என் மானசிக குரு மற்றும் இதயத்தை நட்பு எனும் நறுமணத்தால் நிரப்பிய அவர்களின் வழிகாட்டலின் மூலம் துவங்கும் முதல் பயணம்…